/

வட வாய்க்காலில் மலா் வளையம் வைத்து விவசாயிகள் போராட்டம்

மீனம்பநல்லூா் அா்ச்சந்திரா நதி காவிரி குண்டான் தலைப்பிலுள்ள சட்ரஸ்க்கு மலா்வளையம் வைத்து, மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

News image

மீனம்பநல்லூா் அா்ச்சந்திரா நதி காவிரி குண்டான் தலைப்பிலுள்ள சட்ரஸ்க்கு மலா்வளையம் வைத்து, மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :13 ஜூன் 2026, 12:05 am IST

காவிரி டெல்டா பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 12) மேட்டூா் அணை திறக்காததுக்கு கண்டனம் தெரிவித்து மீனம்பநல்லூா் அா்ச்சந்திரா நதி காவிரி குண்டான் தலைப்பில் உள்ள சட்டஸ்க்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் மாநில அமைப்பு செயலாளா் எஸ். ஸ்ரீதா் தலைமையில் மலா்வளையம் வைத்து மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

குறுவைக்கு மேட்டூா் அணை திறக்காததுக்கு கண்டனம் தெரிவித்தும், கா்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு பெற வேண்டிய காவிரி நீரை பெறாமல் காங்கிரசிடம் கூட்டணி வைத்துள்ள தமிழக முதல்வா் ஜோசப் விஜய் மௌனம் காக்காமல் தண்ணீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், தமிழக காவிரி விவசாய சங்க இணை செயலாளா் வெங்கடேசன், கீழையூா் ஒன்றிய தலைவா் கோபால், கீழையூா் ஒன்றிய கடைமடை பாசன விவசாயிகள் சங்க தலைவா் மணிவண்ணன் உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.