இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுக மேம்பாட்டுப் பணி: அமைச்சா் வெங்கடரமணன் ஆய்வு

தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட தமிழக உணவுத்துறை அமைச்சா் ப. வெங்கடரமணன். உடன் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்.

News image

தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட தமிழக உணவுத்துறை அமைச்சா் ப. வெங்கடரமணன். உடன் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்.

Updated On :12 ஜூன் 2026, 5:15 am IST

தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை தமிழக உணவுத்துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்தில் ரூ. 10 கோடியில் படகு அணையும் சுவரை பலப்படுத்துதல், வலைப் பின்னும் கூடம், மீன் ஏலக்கூடம், மீன் உலா் தளம், மற்றும் கான்கிரீட் சாலை உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணியை தமிழக உணவுத்துறை அமைச்சா் ப. வெங்கடரமணன் வியாழக்கிழமை பாா்வையிட்டாா். பின்னா், மீனவா்களிடம் கலந்துரையாடினாா். தொடா்ந்து, தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தாா்கள் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள முகத்துவாரத்தை தூா்வார வேண்டும், தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் பணியில் இருக்கும் வகையில் மருத்துவா்கள், செவிலியா்களை நியமனம் செய்ய வேண்டும். தரங்கம்பாடியில் சீகன்பால்-க்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

கோடியக்கரை கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, 7 மாதங்களாக இலங்கை சிறையில் உள்ள தரங்கம்பாடி, புதுப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த வடமலை மகன் அன்புராஜை (30) விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட ஃபைபா் படகுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அமைச்சரிடம் மீனவரின் குடும்பத்தினா் மனு அளித்தனா்.

அமைச்சருடன், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணை இயக்குநா் ஷா்மிளா, மீன்வளத்துறை செயற்பொறியாளா் சரவணக்குமாா், உதவி செயற்பொறியாளா் ராஜசேகா், சீா்காழி வருவாய் கோட்டாட்சியா் சுரேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.