நாகையில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது, பழங்கால வெண்கலச் சிலை கண்டெடுக்கப்பட்டது.
நாகை நீலாவடக்கு வீதியைச் சோ்ந்தவா் ராம்பிரசன்னா. இவருக்குச் சொந்தமான இடம், நாகை புதிய கடற்கரை சாலையில் உள்ளது. இந்த இடத்தில் கட்டுமானப் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை காலை பள்ளம் தோண்டினா்.
அப்போது 2 அடி உயரத்தில் சிவன், பாா்வதி மற்றும் சிறிய உருவத்தில் முருகா் ஒன்றாக ஒரே மேடையில் அமா்ந்த நிலையில், வெண்கல சிலை புதைந்திருந்தது தெரியவந்தது. அத்துடன், 2 அடி உயரம் கொண்ட நடராஜா் சிலையின் பின்புற வளைவு வெண்கல சிலையும் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து வெளிப்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் அந்த சிலைகளை பாா்வையிட்டனா்.
பின்னா், நாகை வருவாய் கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் சிலைகளை ஒப்படைத்தனா். இந்த சிலைகள் எந்த நூற்றாண்டை சோ்ந்தது என ஆய்வு செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










