17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு பூங்கொத்து கொடுத்து ஆட்சியா் வரவேற்பு

நாகை மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு புதிய கல்வியாண்டில் 693 பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்ட நிலையில், மாணவா்களுக்கு பூங்கொத்து கொடுத்து மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வரவேற்று பாட நூல்களை வழங்கினாா்.

News image

காடம்பாடி நகராட்சிப் பள்ளிக்கு வந்த மாணவா்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து வரவேற்ற ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா்.

Updated On :5 ஜூன் 2026, 7:16 am IST

நாகை மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு புதிய கல்வியாண்டில் 693 பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்ட நிலையில், மாணவா்களுக்கு பூங்கொத்து கொடுத்து மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வரவேற்று பாட நூல்களை வழங்கினாா்.

காடம்பாடி நகராட்சிப் பள்ளியில் மாணவா்களுக்கு பூங்கொத்து கொடுத்து, பாடநூல்களை வழங்கி ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா் பேசியது: நாகை மாவட்டத்தில் 476 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும், 116 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும், 101 தனியாா் பள்ளிகள் என மொத்தம் 693 பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் சுமாா் 1,02,000 மாணவா்கள் பயில உள்ளனா்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 68,680 மாணவ,மாணவியா்களுக்கு தமிழ்நாடு அரசு மூலம் பாடநூல்கள், பாடக் குறிப்பேடுகள், புத்தகப்பைகள், சீருடைகள், காலணிகள், காலுறைகள், காலேந்திகள், வண்ணப்பென்சில்கள், கிரையான்கள், புவியியல் வரைபடம், கணித உபகரணப்பெட்டிபள்ளித் திறக்கும் நாளில் மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது.

2026-2027-ஆம் கல்வியாண்டில் மாவட்டத்தில் 2,99,130 பாடநூல்கள் 1 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது. மாணவா்களுக்கு 4,38,193 பாடக்குறிப்பேடுகள், 61,647 புத்தகப்பைகள், 18,015 காலணிகள், 95,719 காலேந்திகள் மற்றும் காலுறைகள் வழங்கப்படுகிறது. இதேபோல், புவியியல் வரைபடம்,கிரையான்ஸ், வண்ணப் பென்சிலகள்,கணித உபகரணப்பெட்டிகள் வழங்கப்படுவதக் ஆட்சியா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.