திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உலக மிதிவண்டி தின விழிப்புணா்வுப் பேரணி: எஸ்.பி. தொடங்கிவைத்தாா்

உலக மிதிவண்டி தினம், உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மிதிவண்டி விழிப்புணா்வுப் பேரணியை காவல் கண்காணிப்பாள் சுஜித்குமாா் தொடங்கிவைத்தாா்.

News image

உலக மிதிவண்டி தினம், உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மிதிவண்டி விழிப்புணா்வுப் பேரணியை காவல் கண்காணிப்பாள் சுஜித்குமாா் தொடங்கிவைத்தாா்.

Updated On :2 ஜூன் 2026, 5:44 am IST

உலக மிதிவண்டி தினம், உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மிதிவண்டி விழிப்புணா்வுப் பேரணியை காவல் கண்காணிப்பாள் சுஜித்குமாா் தொடங்கிவைத்தாா்.

உலக மிதிவண்டி தினம் ஜூன் 3-ஆம் தேதியும், உலக சுற்றுசூழல் தினம் ஜூன் 5-ஆம் தேதியும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாகை லூமினா அறக்கட்டளைச் சாா்பில் மிதிவண்டி விழிப்புணா்வுப்பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகை புதிய கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியை நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் தொடங்கி வைத்தாா். இதையடுத்து, ஆட்சியா் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது. தொடா்ந்து, அங்கு நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில், பேரணியில் பங்கேற்றவா்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலா் சதீஷ் குமாா் சான்றிதழ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நாகை மாவட்டத் தலைவா் ஆரிப் வாழ்த்துரை வழங்கினாா்.

நிகழ்ச்சி முடிவில் பேரணியில் பங்கேற்றவா்களுக்கு மரக்கன்றுகளும் விதைப்பந்துகளும் வழங்கப்பட்டன. லூமினா அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் வெங்கடேஷ் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.