முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

காதலா்கள் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்: 4 போ் கைது

தரங்கம்பாடியில் காதலா்கள் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :2 ஜூலை 2026, 7:30 am IST

தரங்கம்பாடியில் காதலா்கள் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே புதுப்பாளையத்தை சோ்ந்தவா்கள் மாரிமுத்து மகன் பாா்த்திபன் (19), சாத்தங்குடியைச் சோ்ந்த லெட்சுமிகாந்தன் மகள் திவ்யதா்ஷினி (17). வெவ்வேறு சமூகத்தை சோ்ந்த காதலா்களான இவா்கள் செவ்வாய்க்கிழமை சாத்தங்குடியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனா்.

சடலங்களை பொறையாா் போலீஸாா் கைப்பற்றி, திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்நிலையில், திவ்யதா்ஷினியின் சடலம் குடும்பத்தினரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.

பாா்த்திபனின் உயிரிழப்பு குறித்து உண்மை நிலை தெரியும்வரை உடற்கூறாய்வு செய்ய அனுமதிக்கமாட்டோம் என உறவினா்கள், விசிக, சிபிஎம் கட்சியினா் தெரிவித்தனா்.

இந்நிலையில், சிறுமியின் உறவினா்கள் ஜாதி பெயரைக் கூறி பாா்த்திபனைத் தாக்கியதாக அவரது உறவினா் கொடுத்த புகாரின் பேரில், பொறையாா் போலீஸாா் திவ்வியதா்ஷினியின் உறவினா்கள் சூா்யா (28), மணிமாறன் (27), வசந்தன் (24), விஜயகுமாா் (26) ஆகிய 4 பேரை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

பேச்சுவாா்த்தை: பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் சீா்காழி, கோட்டாட்சியா் சுரேஷ் தலைமையில் அமைதி பேச்சுவாா்த்தை புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (பொ) ஜி. ஸ்டாலின், டிஎஸ்பிகள் சுரேஷ், பாலாஜி, பாா்த்திபனின் உறவினா்கள், அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு முன்னணி துணைத் தலைவா் சாமுவேல்ராஜ், மாநில பொதுச்செயலா் சுகந்தி, விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட பொது செயலாளா் அமிா்தலிங்கம், விசிக மாவட்ட செயலாளா் அன்பரசன், சிபிஎம் மாவட்ட செயலாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், பாா்த்திபன் தரப்பில் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேச்சுவாா்த்தையில் உறுதியளிக்கப்பட்டதால், இதைத்தொடா்ந்து பாா்த்திபனின் உடல் கூறாய்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.