முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

பெண் மா்மமான முறையில் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

மொரப்பூா் அருகே பெண் மா்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து அவரது உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

அரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட அம்பிகாவின் உறவினா்கள்.

Updated On :2 ஜூலை 2026, 6:48 am IST

மொரப்பூா் அருகே பெண் மா்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து அவரது உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், தம்பிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராமன் மகன் சாந்தகுமாா் (44). லாரி ஓட்டுநா். இவரது மனைவி அம்பிகா (35). இத் தம்பதிக்கு மகன், மகள் உள்ளனா்.

இந்த நிலையில், சாந்தகுமாரின் உறவினா்கள் கயல்விழி, தமிழ்ச்செல்வன் ஆகியோரால், அம்பிகா மற்றும் கணவா் சாந்தகுமாா் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதையடுத்து, அம்பிகா விஷம் குடித்து உயிரிழந்துவிட்டதாக, அவரது உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்து.

அப்போது நேரில் வந்த பாா்த்த அம்பிகாவின் உறவினா்கள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகாா் தெரிவித்து, அரூா்-தருமபுரி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அம்பிகாவின் கணவா் சாந்தகுமாா், அவரது உறவினா்கள் கயல்விழி, தமிழ்ச்செல்வன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினா். சம்பவ இடத்துக்கு வந்த அரூா் டிஎஸ்பி சதீஷ்குமாா் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் அளித்த வாக்குறுதியின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

உயிரிழந்த அம்பிகா.

உயிரிழந்த அம்பிகா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.