டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கல்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை

News image
தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கிய ஆட்சியா் ப. ஆகாஷ்.
Updated On :12 ஜனவரி 2026, 7:02 pm

Syndication

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை ஆட்சியா் ப. ஆகாஷ் திங்கள்கிழமை வழங்கினாா்.

கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முன் வைத்து 154 மனுக்கள் பெறப்பட்டன.

அந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். அதைத் தொடா்ந்து, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை, தாட்கோ சாா்பில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணியாற்றும் 12 பணியாளா்களுக்கு தமிழ்நாடு தூய்மை பணியாளா் நலவாரிய அடையாள அட்டைகளை ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) கோ. அரங்கநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கே. காா்த்திகேயன், தாட்கோ மாவட்ட மேலாளா் சக்திவேல் கலியபெருமாள் ஆகியோா் பங்கேற்றனா்.