தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

நாகையில் புகையிலைப் பொருள்களை கடத்திய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பெருள்கள் மற்றும் கைதான இருவா்.

Updated On :24 பிப்ரவரி 2026, 8:39 pm

நாகையில் புகையிலைப் பொருள்களை கடத்திய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நாகை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், கஞ்சா, சாராயம், புகையிலைப் பொருகள் கடத்தல் மற்றும் விற்பனை ஆகியவற்றைத் தடுக்க போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக, வெளிப்பாளையம் ரயில் நிலையம், கடற்கரைச் சாலை, காடம்பாடி ஆகிய பகுதிகளில் போலீஸாா் வாகன சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக சென்ற வாகனங்களை சோதனையிட்டனா்.

அதில், தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்த செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, நாகை தெத்தி பகுதியைச் சோ்ந்த முகமது இப்ராஜிம் (45), நாகை பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செய்யது யூசுப் (49) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 60 கிலோ புகையிலை பொருள்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.