/

சாலைப் பணிகள்: நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி மைய இயக்குநா் ஆய்வு

நாகை மாவட்டத்தில் தஞ்சை வட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கட்டுப்பாட்டின்கீழ் நடைபெற்றுவரும் பல்வேறு சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி மைய இயக்குநா் சரவணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
ஆலங்குடி - தாளந்திருவாசல் சாலைப் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி மைய இயக்குநா் சரவணன்.
Updated On :11 பிப்ரவரி 2026, 9:08 pm

தினமணி செய்திச் சேவை

நாகை மாவட்டத்தில் தஞ்சை வட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கட்டுப்பாட்டின்கீழ் நடைபெற்றுவரும் பல்வேறு சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி மைய இயக்குநா் சரவணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அதன்படி, நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஆலங்குடியிலிருந்து, தாளந்திருவாசல் செல்லும் மாவட்ட முக்கிய சாலை வலுப்படுத்தும் பணிகளை இயக்குநா் சரவணன் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலைகளின் தரம், சாலையின் நீளம், அகலம், அடா்த்தி மற்றும் உறுதித்தன்மை உள்ளிட்ட அம்சங்களை நேரடியாக பரிசோதனை செய்து உறுதி செய்தாா்.

மேலும், சாலைப் பணிகள் அரசின் தரநிலைகளுக்கு ஏற்ப நடைபெற வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு பணிகள் துரிதமாகவும் தரமாகவும் முடிக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்புப் பொறியாளா் பாலசுப்ரமணியம், நாகை கோட்டப் பொறியாளா் ராஜேஷ் கண்ணா, தரக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் சிவக்குமாா், உதவி கோட்டப் பொறியாளா்கள் அய்யாதுரை, அண்ணாதுரை, உதவி பொறியாளா்கள் பாரதிதாசன், கிருபாகரன், உமாமகேஸ்வரி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.