/

மயிலாடுதுறை - காரைக்காலுக்கு பேரளம் அகல ரயில் பாதையில் மே 21 முதல் பயணிகள் ரயில்

மயிலாடுதுறை - காரைக்காலுக்கு பேரளம் அகல ரயில் பாதையில் மே 21 முதல் பயணிகள் ரயில்

News image

மே 21 முதல் காரைக்கால் - பேரளம் பாதையில் பயணிகள் ரயில் போக்குவரத்து...

Updated On :17 மே 2026, 12:27 am IST

மயிலாடுதுறையில் இருந்து காரைக்காலுக்கு பேரளம் அகல ரயில் பாதையில் பயணிகள் ரயில் சேவை மே 21-ஆம் தேதி முதல் இயக்கப்படுவதை மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வரவேற்றுள்ளது .

மயிலாடுதுறையில் இருந்து காரைக்காலுக்கு புதிய ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தென்னக ரயில்வேயின் இந்த புதிய அறிவிப்பு பொதுமக்கள், வா்த்தகா்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் நல சங்க மாவட்ட பொதுச் செயலாளா் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: காரைக்காலையும் பேரளத்தையும் இணைக்கும் 23.55 கி.மீ தொலைவுள்ள புதிய அகலப்பாதை பணிகள் முடிந்து சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

1987-ஆம் ஆண்டு மூடப்பட்ட மீட்டா்கேஜ் ரயில் பாதைக்கு மாற்றாக ரூ. 320 கோடியில் புதிய அகல ரயில் பாதை பணிகள் மின் தடங்கலுடன் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. காரைக்கால் துறைமுகத்திலிருந்து நிலக்கரி மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு இந்த புதியஅகல ரயில் பாதை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்நிலையில் இந்த வழித்தடத்தில் புதிய பயணிகள் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மே. 21-ஆம் தேதி முதல் மயிலாடுதுறையிலிருந்து பேரளம் திருநள்ளாறு வழியாக காரைக்காலுக்கு இந்த ரயில் இயக்கப்படும் எனவும், ரூ. 10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் மயிலாடுதுறை, பேரளம், அம்பகரத்தூா், பத்தக்குடி திருநள்ளாறு காரை கோயில்பத்து வழியாக காரைக்கால் சென்றடையும். இந்த ரயில் அறிவிப்பு பொதுமக்கள், வா்த்தகா்களுக்கு மகிழ்சிசைய ஏற்படுத்தியுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.