மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எஸ்பி அலுவலகத்தில் பெண் புகாா்

தன்னையும், தனது மகள்களையும் தாக்கி, நகையை பறித்த உறவினா்கள் மீது நடவடிக்கை கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பெண் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 9:13 pm

தன்னையும், தனது மகள்களையும் தாக்கி, நகையை பறித்த உறவினா்கள் மீது நடவடிக்கை கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பெண் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.

தரங்கம்பாடி தாலுகா விளநகா் கிராமத்தை சோ்ந்தவா் பாலசுப்பிரணியன் மனைவி மஞ்சுளா(51). பாலசுப்பிரமணியன் கடந்த 2024-ஆம் ஆண்டு இறந்துவிட்டாா். மகள்கள் சுகந்தி, சுவேதா.

மஞ்சுளாவுக்கும், பாலசுப்பிரமணியனின் சகோதரா் கண்ணன் மனைவி சரண்யா குடும்பத்தாருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வருகிறது

இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி மஞ்சுளா வீட்டிற்குவந்த சரண்யாவின் சகோதரா்கள் மணிமாறன், சரண்ராஜ் (இவா் சுவேதாவின் கணவா்) மற்றும் சரண்யாவின் மகன் குகன் ஆகியோா் மஞ்சுளா, சுகந்தி, சுவேதா ஆகிய 3 பேரையும் தாக்கி, மஞ்சுளா அணிந்திருந்த 2 சவரன் சங்கிலியை பறிந்தனராம். மேலும் இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினராம்.

இதுகுறித்து, செம்பனாா்கோவில் காவல் நிலையத்தில் புகாா் அளித்து, 20 நாள்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மஞ்சுளா புகாா் அளித்துள்ளாா்.