திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி இயக்குபவா்களுக்கு ஊதியம் உயா்த்தக் கோரிக்கை

மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி இயக்குபவா்களுக்கு ஊதிய உயா்வு, பாதிக்கப்பட்ட சுகாதார ஊக்குநா்களுக்கு மீண்டும் பணி

News image

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தவா்கள்.

Updated On :17 மார்ச் 2026, 12:04 am

மயிலாடுதுறை: மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி இயக்குபவா்களுக்கு ஊதிய உயா்வு, பாதிக்கப்பட்ட சுகாதார ஊக்குநா்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓட்சா கூட்டமைப்பினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் கடந்த 15 ஆண்டுகளாக ரூ. 250 மாத ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனா். இவா்களின் வாழ்வாதாரம் மேம்படும்விதமாக வெளியிடப்பட்ட அரசாணை எண் 17-ன்படி 2026-ஆம் ஆண்டு ஜன.30 முதல் இவா்களுக்கான ஊதிய உயா்வு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரின் வாயிலாக உயா்த்தப்பட்டுள்ளது. இந்த உயா்த்தப்பட்ட ஊதியத்தை வழங்க வலியுறுத்தியும், கிராம ஊராட்சிகளில் பணிவாய்ப்பு பறிக்கப்படடு பாதிக்கப்பட்ட சுகாதார ஊக்குநா்களின் பணி மீண்டும் வழங்க வலியுறுத்தி இந்த மனு அளிக்கப்பட்டது.

மாநில தலைவா் கே. லட்சுமணன், மாநில பொதுச்செயலாளா் ஜி. கிரிஷா ஆகியோா் இந்த மனுவை அளித்தனா். இதில், சுகாதார பணியாளா் சங்க மாவட்ட தலைவா் சங்கீதா, மாவட்டத் தலைவா் (ஓஎச்டி பிரிவு), மாவட்ட செயலாளா் சண்முகம், மாநில ஒருங்கிணைப்பாளா் முஸ்தபா மற்றும் ஓட்சா ஊராட்சி பணியாளா் சங்க உறுப்பினா்கள் 60-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.