லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

உலக அமைதி வேண்டி யாகம்

News image
Updated On :5 மார்ச் 2026, 11:19 pm

சீா்காழி அருகே ஆலஞ்சேரி அகத்தீஸ்வரா் கோயிலில் உலக அமைதி வேண்டி சிறப்பு மகாயாகம் அண்மையில் நடைபெற்றது.

ஆலஞ்சேரி கிராமத்தில் பழைமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வரா் கோயில் உள்ளது. அகஸ்திய மகரிஷி வழிபட்ட தலமான இக்கோயிலில், போா் பதற்றம் தணிந்து, உலகம் அமைதி பெற வேண்டி 30 யாக குண்டங்கள் அமைத்து, மகா யாகம் நடைபெற்றது.

தொடா்ந்து, புனித நீரால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஆலய டிரஸ்ட் மோகன்குமாா் -அலமேலு, ஒளிலாய நிா்வாகிகள் நாடி. கலிய . செல்வமுத்துகுமரன்-மணிமொழி, நாடி-ராஜ மாமல்லன்-ஜெனிதா ராஜ. தனநந்தினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.