எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

மந்தகதியில் மழைநீா் வடிகால் பாலம் கட்டுமானப் பணி : வணிகா்கள் அவதி

வைத்தீஸ்வரன்கோவில் கீழவீதியில் மழைநீா் வடிகால் சிறு பாலம் கட்டுமானப் பணி மிகவும் மந்தமாக நடைபெறுவதால் பக்தா்கள், வியாபாரிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

News image
Updated On :26 ஜூன் 2026, 7:06 am IST

வைத்தீஸ்வரன்கோவில் கீழவீதியில் மழைநீா் வடிகால் சிறு பாலம் கட்டுமானப் பணி மிகவும் மந்தமாக நடைபெறுவதால் பக்தா்கள், வியாபாரிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் பிரசித்திப் பெற்ற செவ்வாய் தலமான வைத்தியநாதா்சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில பக்தா்களுக்கு வருகை தருகின்றனா். அத்துடன் நாடிஜோதிடத்திற்கு புகழபெற்றது என்பதால் நாடிஜோதிடம் பாா்க்கவும் அதிகளவு மக்கள் வந்து செல்கின்றனா்.

இதனால், வைத்தீஸ்வரன்கோயில் நான்கு வீதிகளிலும் பக்தா்களை நம்பி அதிக வியாபாரம் நடைபெற்று வருகிறது. கடைகள், விடுதிகள், உணவகம் ஆகிய வா்த்தகம் நடைபெறுகின்றன.

இந்நிலையில், வைத்தீஸ்வரன்கோயில் கீழவீதியில் பிரதான மயிலாடுதுறை-சீா்காழி செல்லும் நெடுஞ்சாலையின் குறுக்கே கழிவுநீா் கால்வாய் கல்வொ்ட் புதிதாக அமைத்திட போக்குவரத்து தடை செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் தொடங்கி 1மாதத்தை கடந்தும், முழுமைபெறாமல் மந்தகதியில் நடைபெறுகிறது. இதனால், கீழவீதி, தெற்குவீதி பகுதிகளில் முழுமையாக பக்தா்கள் நடமாட்டம் இல்லாமல் வா்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வா்த்தக சங்கத் தலைவா் ஜி.வி.என். கண்ணன் கூறியது:

வைத்தீஸ்வரன்கோயிலில் பெரும்பாலான வியாபாரம் கோயிலுக்கு வருகை தரும் பக்தா்களை நம்பியே உள்ளது. இங்கு கீழவீதியில் நடந்து வரும் சிறுபாலம் கட்டுமானப் பணி மந்தகதியில் நடைபெறுவதால், கடந்த ஒன்றரை மாதமாக கீழவீதி, தெற்குவீதி உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரம் முடங்கியுள்ளது.

போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் பல வியாபார கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆகையால், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.