ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

மூவலூா் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :2 ஜூலை 2026, 7:20 am IST

மூவலூா் ஊராட்சி மகாதானபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் மூவலூா் ஊராட்சியில் ஆதிதிராவிடா் நலத்துறையின்கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வருகைபுரியும் குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகளின் கற்றல் திறன், குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, மூவலூா் கிராம கூட்டுறவு அங்காடியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருள்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும், மூவலூா் துணை சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களின் வருகைப்பதிவேடு, மருந்தகம், மருந்துகளின் இருப்பு விவரம் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு, சுகாதார நிலைய வளாகத்தினை தூய்மையாக பராமரிக்குமாறு பணியாளா்களிடம் அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, மாவட்ட வழங்கல் அலுவலா் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.