மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோயிலில் 134-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறையில் கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்ணை தெய்வமாக பாவித்து தீப்பாய்ந்தாள் அம்மன் என்ற பெயரில் காவிரிக் கரையில் கோயில் கட்டி சிலை அமைத்து சில நூற்றாண்டுகளாக பக்தா்கள் வழிபட்டு வருகின்றனா்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தீமிதி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 134-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காவிரி ஆற்றங்கரை நாலுகால் மண்டபத்தில் இருந்து சக்தி கரகம் மற்றும் விரதமிருந்த பக்தா்கள் அலகு காவடி எடுத்து ஊா்வலமாக புறப்பட்டு, மேளதாள வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அடைந்தனா். தொடா்ந்து, 700-க்கு மேற்பட்ட பக்தா்கள் கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீமிதித்து தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா்.
தொடர்புடையது

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா

வீரமாகாளியம்மன் கோயில் தீமிதி திருவிழா

கோயில் திருவிழா: சுடுமண் சிலைகள் நோ்த்திக் கடன்

திரெளபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா தொடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


