குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

உலகத் தாய்மொழி நாள் விழா

சீா்காழியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மயிலாடுதுறை மாவட்ட அமைப்பின் சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 9:15 pm

Syndication

சீா்காழி: சீா்காழியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மயிலாடுதுறை மாவட்ட அமைப்பின் சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா, பொதுவுடமை இயக்கங்களின் நூற்றாண்டு சிறப்பு கவியரங்க விழா, மற்றும் நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது (படம்).

நிகழ்ச்சிக்கு த.க.இ.பெ. மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் சுரேஷ் தலைமை வகித்தாா். த.க.இ.பெ. மாநிலக் குழு உறுப்பினா் சுந்தரய்யா, செம்மலா் சி. வீரசேனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வெல்லும் பொதுவுடமை என்ற தலைப்பிலான கவியரங்க நிகழ்விற்கு மாவட்ட சிறப்புத் தலைவா் ஜெக சண்முகம் தலைமை வகித்தாா். கவிஞா்கள் ஜெ. வீரபாண்டியன், அலெக்சிஸ் நிக்கோலஸ், ரஞ்சித் குமாா் ஆகியோா் கவிதை வாசித்தனா்.

முனைவா் கோ. சதீஸ் எழுதிய வரலாற்று நிலையில் ஐகாரம் என்ற நூலை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சாா்பில் வெளியிட, சீா்காழி நூலக வாசகா் வட்டத் தலைவா் பாபுநேசன் பெற்றுக்கொண்டாா். புத்தூா் அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியா் முனைவா் சதீஸ் உலகத் தாய்மொழி நாள் குறித்து பேருரை நிகழ்த்தினாா்.

நிகழ்வில் காழி முத்தமிழ் முற்றம், தமிழ்நாடு அறிவியல் இயக்க உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.