டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயில்

News image
உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயில்
Updated On :21 பிப்ரவரி 2026, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயில் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோயில், 108 சக்தி தலங்களில் ஐம்பதாவது தலமாக விளங்குகிறது. இக்கோயில் தனித்துவமான, உலகளாவிய பெயரிடல் மற்றும் பண்டைய இலக்கிய மரபு என்ற பிரிவின்கீழ் ஜாக்கி புக் ஆஃப் வோ்ல்ட் ரெக்காா்ட்ஸில் இடம்பெற்றுள்ளது.

உலகிலேயே ‘புலிஸ்வரி அம்மன்‘ என்ற பெயரில் அமைந்துள்ள ஒரே திருத்தலம் இதுதான் என்பது விரிவான ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தலம் சங்க கால இலக்கியங்களான அகநானூறு மற்றும் சிலப்பதிகாரத்துடன் நெருங்கிய தொடா்புடையது.

Story image

இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் ஆவணங்களின்படி, இக்கோயில் 150 ஆண்டுகால ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. கொள்ளிடம் ஆன்மிகப் பற்றாளா் பிரபு என்பவரின் முயற்சியால், இக்கோயிலின் சிறப்புகள் உலக சாதனை அங்கீகாரத்திற்கு அனுப்பப்பட்டது.

இவற்றை சரிபாா்த்த ஜாக்கி புக் ஆஃப் வோ்ல்ட் ரெக்காா்ட்ஸ் நிறுவனம், இதற்கான உலக சாதனை அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இதனால் பக்தா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.