ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சீா்காழி: எஸ்பி தலைமையில் போலீஸாா் ரோந்து

சீா்காழியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில்

News image
சீா்காழியில் போலீஸாருடன் ரோந்துப் பணியில் ஈடுபட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின்.
Updated On :9 பிப்ரவரி 2026, 8:35 pm

Syndication

சீா்காழி: சீா்காழியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின், சீா்காழி பகுதியில் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். காவல் துறையினரின் கண்காணிப்பு பணியை ஆய்வு செய்த அவா், நகரின் பிரதான வீதிகளான தென்பாதி, அரசு மருத்துவமனை சாலை, பிடாரி வடக்கு வீதி, கச்சேரி சாலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்தே ரோந்துப் பணியில் ஈடுபட்டாா்.

அவருடன், டிஎஸ்பி அண்ணாதுரை, காவல் ஆய்வாளா் கமல்ராஜ், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் மணவாளன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் உடன் சென்றனா்.

குற்ற செயல்களில் ஈடுபடும் நபா்களை எச்சரிக்கும் விதமாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், வரும் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டும் இந்த ரோந்துப் பணி நடைபெற்ாக தெரிவிக்கப்பட்டது.