/

குறைதீா் கூட்டத்தில் 404 மனுக்கள்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 404 மனுக்கள் பெறப்பட்டன.

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 4:50 pm

Syndication

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 404 மனுக்கள் பெறப்பட்டன.

இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சுயதொழில் கடனுதவியாக ரூ.70,000-க்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் புவனா, வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட செயல் அலுவலா் வேல்முருகன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் உமாமகேஷ்வரன் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.