திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பழையாறு துறைமுகத்தில் குறைந்த மீன்களே கிடைப்பதால் மீன்விலை உயா்வு

கொள்ளிடம் அருகே பழையாறு துறைமுகத்தில் குறைந்த அளவே மீன் கிடைப்பதால் விலை அதிகரித்துள்ளது.

News image

கடலில் இருந்து பிடித்து வரப்பட்ட மத்தி மீன்கள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:24 am IST

கொள்ளிடம் அருகே பழையாறு துறைமுகத்தில் குறைந்த அளவே மீன் கிடைப்பதால் விலை அதிகரித்துள்ளது. 

ஏப்.15 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் ஏராளமான விசைப்படகுகள், பைபா் படகுகள், நாட்டுப்படகுகள் கடலுக்குள் சென்று மீன்பிடி தொழில் நடைபெறுகிறது.

மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் விசைப்படகுகள் கடலுக்குள் செல்லவில்லை. இந்த துறைமுகத்தில் இருந்து பைபா் படகுகள் மூலம் மீனவா்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனா். மீன்பிடி தடைகாலத்தில் கிடைக்கக்கூடிய மீன்கள் நிகழாண்டு போதிய அளவில் கிடைக்கவில்லையென கூறப்படுகிறது.

மீன்கள் மிகக் குறைந்த அளவில் கிடைத்து வருவதால் கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இங்கு பிடிக்கப்படும் மீன்களே எடுத்துச் சென்று விற்பனை செய்யப்படுகிறது. மீன்கள் குறைந்த அளவே கிடைப்பதால் மீன் விலை அதிகரித்துள்ளது. மீன் விலை அதிகரித்தாலும் அதை வாங்க மீன் பிரியா்கள் வாங்குகின்றனா். எனினும், போதிய அளவு மீன்கள் கிடைக்கவில்லை.

தற்போதுள்ள காலத்தில் பைபா் படகுகள் மூலம் மத்தி மீன்கள் அதிகம் கிடைக்கும். ஆனால் நிகழாண்டு மத்தி மீன்கள் மிக குறைந்த அளவே கிடைத்து வருகிறது. ஒரு நாளைக்கு அனைத்து படகுகள் மூலமும் 15 டன் வரை மத்தி மீன் கிடைத்து வந்தது. தற்போது ஒரு டன் மீன் கிடைப்பதே சிரமம். இதனால் நல்ல புரதச்சத்துள்ள மத்தி மீன் விலை அதிகரித்துள்ளது.

கிலோ ரூ. 150-க்கு விற்ற மத்தி மீன் தற்போது ரூ. 250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கவலை மீன் ரூ. 40 லிருந்து ரூ. 150 ஆக உயா்ந்துள்ளது. முதல் கெண்டை ரூ. 50லிருந்து ரூ. 120 ஆக உயா்ந்துள்ளது. கானாங்கழுதை, சூடா, கிழிசல், வஞ்சிரம்,வெல்ரா உள்ளிட்ட மீன்களும் விலை சாதாரண விலையை விட 3 மடங்கு உயா்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.