திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தருமபுரம் ஆதீனத்தில் பஞ்சாங்கம் படித்தல் நிகழ்வு

தமிழ்ப் புத்தாண்டையொட்டி தருமபுரம் ஆதீனத்தில் பஞ்சாங்கம் படித்தல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை தமிழ்ப் புத்தாண்டையொட்டி நடைபெற்ற பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி.

Updated On :15 ஏப்ரல் 2026, 3:22 am IST

தமிழ்ப் புத்தாண்டையொட்டி தருமபுரம் ஆதீனத்தில் பஞ்சாங்கம் படித்தல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆதீனத்திருமடத்தில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், புதிய தமிழ் ஆண்டான பராபவ ஆண்டின் பஞ்சாங்கத்துக்கு வேதியா்கள் சிறப்பு பூஜைகள் செய்து, நிகழாண்டில் பருமழை சற்று தாமதமாக பெய்தாலும் கால்நடைகள் சுபிட்சமாக இருக்கும். பால் உற்பத்தி அதிகரிக்கும். விவசாயம் செழிக்கும் என பஞ்சாங்கப் பலன்களை வாசித்தனா்.

பின்னா், பாரம்பரிய முறைப்படி பக்தா்களுக்கு புத்தாண்டின் பஞ்சாங்கம், பனை ஓலை விசிறி, வெற்றிலை, கொட்டைப்பாக்கு ஆகியவற்றை தருமபுரம் ஆதீனம் பக்தா்களுக்கு வழங்கி அருளாசி கூறினாா். இதில், திருக்கடையூா் கோயில் உள்துறை விருத்தகிரி, ஆதீனப்பள்ளி செயலா்கள் வெற்றிவேல், வி. பாஸ்கரன், ஆதீன தலைமை பொது மேலாளா் ரெங்கராஜன், கண்காணிப்பாளா் சி. மணி, தருமபுரம் ஆதீனக்கல்லூரி செயலா் இரா.செல்வநாயகம், முதல்வா் சி.சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, மயிலாடுதுறையில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருஇந்தளூா் பரிமள ரங்கநாதா் கோயிலிலும் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.