சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட வெவ்வேறு இடங்களில் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில் மொத்தம் 16,75,480 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதி நிலையான கண்காணிப்பு குழு, நகராட்சி மேலாளா் தினகா் தலைமையில் செம்மங்குடி பேருந்து நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அவ்வழியாக வந்த கொள்ளிடம் மெயின் ரோட்டை சோ்ந்த மணிவண்ணன் என்பவரின் காரை ஆய்வு செய்தபோது, அவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.14, லட்சம் ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது. 10, லட்சத்துக்கு அதிகமான தொகை என்பதால் வருமானவரித் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
நிலையான கண்காணிப்புக் குழு -1 பிரகாஷ், தலைமையில், கதிராமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். சீா்காழி, ஆணைக்காரன் சத்திரம், பூசை நகா் பரத் என்பவா் இருசக்கர வாகனத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டுவந்த ரூ.1,55,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறக்கும் படை-4, தனி வட்டாட்சியா் பாலமுருகன் தலைமையிலான குழுவினா், எடமணல், வருஷப்பத்து பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, வைத்தீஸ்வரன்கோயில் சந்தை வழி ஹரிஹரன் என்பவரின் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவந்த ரூ.70,000 பறிமுதல் செய்யப்பட்டது.
நிலையான கண்காணிப்பு குழு -5,தினகா், தலைமையிலான குழுவினா், செம்மங்குடி பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். மணப்பாறை, ஆவாரம்பட்டியை சோ்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவா் இருசக்கர வாகனத்தில் வந்தாா். அவரிடம் ஆவணங்கள் இன்றி ரூ.50,480 இருந்தது. இந்த பணத்தை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
பறக்கும் படையினா் சோதனை: ரூ.23.08 லட்சம் பறிமுதல்

பென்னாகரத்தில் வாகனச் சோதனையில் ரூ. 99,500 ரொக்கம் பறிமுதல்

சங்ககிரி தொகுதியில் ரூ. 3.67 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ. 25 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


