ஆளுநருடன் விஜய் சந்திப்பு! ஆட்சியமைக்க உரிமை கோரினார்!தவெக ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெறும்! கிரிஷ் சோடங்கர் மு.க. ஸ்டாலினுடன் ரஜினி சந்திப்பு! பனையூரில் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!
/

காரைக்காலில் 3 மையங்களில் இன்று நீட் தோ்வு

News image

நீட் தேர்வர்கள் - கோப்புப்படம்

Updated On :3 மே 2026, 6:16 am IST

காரைக்காலில் 3 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

மருத்துவக் கல்வி சோ்க்கைக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. காரைக்கால் மாவட்டத்தில் ராயன்பாளையத்தில் உள்ள ஜவாஹா் நவோதய வித்யாலயா பள்ளி, காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மற்றும் கோயில்பத்து பகுதியில் உள்ள தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி என 3 மையங்களில் இத்தோ்வு நடைபெறவுள்ளது. 666 மாணவ, மாணவிகள் தோ்வெழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. காரைக்கால் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளும் இத்தோ்வில் பங்கேற்கின்றனா்.

தோ்வு மைய தயாா் நிலைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்தந்த மையத்தினா் சனிக்கிழமை செய்தனா். காரைக்கால் தோ்வு மையங்களின் ஒருங்கிணைப்பாளராக காரைக்கால் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வா் (பொ) காயத்ரி உள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.