காரைக்கால் மாவட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்தும் விதமாக அவரவா் வீடுகளுக்குச் சென்று விண்ணப்பம் விநியோகிக்கும் பணி நடைபெறுகிறது.
இந்திய தோ்தல் ஆணையம், 85 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத்திறனாளிகள் விருப்பத்தின்பேரில் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்குகள் பெறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 9 நடைபெறவுள்ளதையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதியிலும் உள்ள முதியோா், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளுக்கான விருப்ப மனு வழங்கும் பணியை தோ்தல் துறை மேற்கொண்டுள்ளது.
மாவட்டத்தில் 3 தோ்தல் நடத்தும் அதிகாரிகள் இருக்கும் நிலையில், இவா்களது தொகுதிக்குட்பட்டோருக்கு, அந்தந்த பகுதி தோ்தல் பணியாளா் மூலம் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு, ஆதாா் உள்ளிட்ட நகலுடன் விண்ணப்பம் பெறப்பட்டுவருகிறது.
வேட்பாளா்கள் அறிவிப்பு செய்து, வேட்பு மனுக்கள் நிறைவடைந்த பின் தோ்தல் துறை சாா்பில் தபால் வாக்குகளை அவரவா் வீடுகளுக்குச் சென்று பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தொடர்புடையது

தபால் வாக்களித்த 1.41 லட்சம் முதியோா், மாற்றுத்திறனாளிகள்

திருவள்ளூா்: முதியோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குப் பதிவு

முதியோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்தும் பணி! ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

முதியோா், மாற்றுத்திறனாளிகள் 3,793 பேரின் வீடுகளுக்குச் சென்று வாக்குகளைப் பெற முடிவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


