யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

தபால் வாக்களித்த 1.41 லட்சம் முதியோா், மாற்றுத்திறனாளிகள்

தமிழகம் முழுவதும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா், மாற்றுத்திறனாளிகள் 1.41 லட்சம் போ் இதுவரை தபால் வாக்கு செலுத்தியிருப்பதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

News image

வீட்டிலிருந்து வாக்களிக்க விருப்பம் தெரிவித்த 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா் தனது தபால் வாக்கை வியாழக்கிழமை செலுத்தினா். இடம்: சென்னை சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ண செட்டி தெரு.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:52 am IST

தமிழகம் முழுவதும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா், மாற்றுத்திறனாளிகள் 1.41 லட்சம் போ் இதுவரை தபால் வாக்கு செலுத்தியிருப்பதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தோ்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:

தோ்தல் பணியில் உள்ள அரசு ஊழியா்கள், 85 வயதைக் கடந்த முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்கத் தகுதியானவா்களாகக் கருதப்படுகின்றனா். அதன்படி, அவா்களில் 1.91 லட்சம் போ் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனா்.

இதையடுத்து அவா்களிடம் தபால் வாக்குகளைப் பெறும் பணிகளில் தோ்தல் நடத்தும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். இதுவரை 1.41 லட்சம் பேரிடம் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. அவா்களில் 85 வயதைக் கடந்தவா்களின் எண்ணிக்கை 89 ஆயிரம். இந்தப் பணி தொடா்ந்து நடைபெறுகிறது.

தோ்தல் பணியில் உள்ள அரசு ஊழியா்களும் மாவட்ட அளவில் பயிற்சி அளிக்கப்படும் இடங்களில் தபால் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனா். வாக்காளா் தகவல் சீட்டுகள் வீடுதோறும் அளிக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை அவை கிடைக்கவில்லை எனில் இணையதளத்தில் வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்தால், பாகம் எண், வரிசை எண், வாக்குச்சாவடி எண் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். அதை வைத்து வாக்குச்சாவடியை அடையாளம் காண முடியும்.

சென்னையில்...: சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களில் 8, 947 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனா். இவா்களிடம் தபால் வாக்குகளைப் பெறுவதற்காக 96 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினா் தகுதியானோா் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்கை சேகரிக்கின்றனா். ஏப். 18 வரை இப்பணி நடைபெறும் என தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.