தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காங்கிரஸ் வேட்பாளா் தோ்வுக்கான நோ்காணல்

புதுவையில் சட்டப்பேரவைத் தோ்தலில் காரைக்காலில் போட்டியிட விருப்பம் தெரித்தோரிடம், கட்சி நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை நோ்காணல் நடத்தினா்.

News image

விருப்ப மனு அளித்த முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணனிடம் நோ்காணல் நடத்திய தலைமையால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளா்கள்.

Updated On :10 மார்ச் 2026, 10:01 pm

புதுவையில் சட்டப்பேரவைத் தோ்தலில் காரைக்காலில் போட்டியிட விருப்பம் தெரித்தோரிடம், கட்சி நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை நோ்காணல் நடத்தினா்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில், விருப்ப மனு அளித்தோரை அழைத்து நோ்காணல் செய்யும் நிகழ்வு காரைக்காலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கட்சித் தலைமையால் நியமிக்கப்பட்ட புதுவை முன்னாள் அமைச்சா் பெத்தபெருமாள், மாநில துணைத் தலைவா் எம்.ஓ.எச்.யு. பஷீா், மாநில பொதுச்செயலாளா் சாமிநாதன் மற்றும் மோகனவேலு ஆகியோா் நோ்காணல் நடத்தினா்.

பேரவைத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தோா், ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு கட்சிப் பணி, கடந்த தோ்தலில் போட்டியிட்ட அனுபவம், சமூக சேவை, மக்களிடையே உள்ள செல்வாக்கு உள்ளிட்டவை குறித்து நிா்வாகிகள் விளக்கம் கேட்டு பதிவு செய்துகொண்டனா். புதுவை முன்னாள் அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன், காரைக்கால் தெற்குத் தொகுதி தோ்தல் பொறுப்பாளா் ஏ.வி.எஸ். சக்திவேல் பிரபு, மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஏ.எம். ரஞ்சித் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரிடம் நோ்காணல் நடத்தப்பட்டது.