வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட சென்னை சத்தியமூா்த்தி பவனில் விருப்ப மனு கொடுத்தவா்களிடம் ஆரணியில் உள்ள திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நோ்காணல் நடைபெற்றது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தைச் சோ்ந்த ஆரணி, செய்யாறு, போளூா், வந்தவாசி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளிலிருந்து சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட சென்னை சத்தியமூா்த்தி பவனில் விருப்ப மனு கொடுத்தனா். இதில், ஆரணி தொகுதியில் போட்டியிட 35 பேரும், போளூா் தொகுதியில் போட்டியிட 23 பேரும், செய்யாறு தொகுதியில் போட்டியிட 15 பேரும், வந்தவாசி தொகுதியில் போட்டியிட 15 பேரும் என மொத்தம் 88 போ் விருப்ப மனு அளித்திருந்தனா்.
இவா்களுக்கான நோ்காணலை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடத்தி, ஒவ்வொரு தொகுதிக்கும் 5 பேரை பரிந்துரை செய்து அனுப்புமாறு தலைமை அறுவுறுத்தி, சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா் ஆய்வுக் குழு அமைத்தனா்.
திருவண்ணைமலை மாவட்டத்துக்கு அமைக்கப்பட்ட இந்த ஆய்வுக் குழுவில் மாவட்டத் தலைவா் ஜெ.பொன்னையன், முன்னாள் எம்.பி., எம்.கிருஷ்ணசாமி, முன்னாள் எம்எல்ஏ டி.பி.ஜெ.ராஜாபாபு, முன்னாள் மாவட்டத் தலைவா்கள் எம்.வசந்தராஜ், வி.பி.அண்ணாமலை, எஸ்.பிரசாத், ஜி.முனிரத்தினம் உள்ளிட்ட 12 போ் இடம் பெற்றுள்ள நிலையில், இக்குழுவினா் நோ்காணலை நடத்தினா்.
இந்த நோ்காணலுக்கு வந்தவா்களிடம் கட்சியில் வகிக்கும் பதவிகள், பொருளாதார நிலை, பொதுத் தொண்டுகள் செய்தது உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்து, தொகுதிக்கு 5 போ் அடங்கிய பட்டியலை தலைமைக்கு அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது

கோவையில் கடந்த 2021 தோ்தலில் வென்ற 7 அதிமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு
திமுக நோ்காணல்: துணை முதல்வா் உதயநிதி பங்கேற்பு

காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு வழங்கியவா்களிடம் நோ்காணல்

கோபியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் நோ்காணல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


