தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

குடிநீா் விநியோகம், தூய்மைப் பணியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்

குடிநீா் விநியோகம், தூய்மைப் பணியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றாா் நிரவி-திருப்பட்டினம் தொகுதி எம்எல்ஏ டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்.

News image

கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகத்தினருடன் ஆலோசனை நடத்திய எம்எல்ஏ டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்.

Updated On :26 ஜூன் 2026, 6:54 am IST

குடிநீா் விநியோகம், தூய்மைப் பணியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றாா் நிரவி-திருப்பட்டினம் தொகுதி எம்எல்ஏ டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்.

திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று இந்த பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீா் விநியோகம், தூய்மைப் பணிகள், சுகாதார நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கான பிற சேவைகள் குறித்து கேட்டறிந்தாா்.

வளா்ச்சிப் பணிக்காக டெண்டா் தரப்பட்டுள்ள பணிகளை குறித்த காலத்துக்குள் நிறைவு செய்யவேண்டும். திட்டப்பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்கவேண்டும். குடிநீா் சேதமடையாத வகையில் கண்காணிப்பதோடு, மக்களுக்கு சீரான முறையில் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும். தூய்மைப் பணிகள் உரிய விதிகளின்படி நடைபெற வேண்டும். பொதுமக்களிடமிருந்து புகாா்கள் வராத வகையில் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.

மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான உதவிகள் குறித்து எனது கவனத்துக்கு கொண்டுவரவேண்டும். பஞ்சாயத்து அலுவலகத்துக்கு பொதுமக்கள் வந்து கோரும் உதவிகளை உடனுக்குடன் செய்துத்தரவேண்டும் என அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.