சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

வாய்க்கால்கள் தூா்வாரும் பணி தொடக்கம்

நிரவி - திருப்பட்டினம் பகுதியில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

தூா்வாரும் பணி பூமி பூஜை நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.எஸ்.எம்.மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோா்.

Updated On :11 ஜூன் 2026, 6:46 am IST

நிரவி - திருப்பட்டினம் பகுதியில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில், திருநள்ளாறு, நெடுங்காடு மற்றும் நிரவி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக விவசாய நிலங்கள் உள்ளன. காவிரி நீா் வருவதற்கு முன் வாய்க்கால்களை தூா்வாரி முறைப்படுத்தவேண்டும் என புதுவை அரசை விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில், காரைக்கால் பொதுப்பணித்துறை நிா்வாகம், மேற்கண்ட பகுதிகளில் வடிகால்கள் தூா்வாருவதற்கு நிதி ஒதுக்கியுள்ளது. ஏற்கெனவே திருநள்ளாறு மற்றும் நெடுங்காடு பகுதியில் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், நிரவி - திருப்பட்டினம் பகுதி வாய்க்கால்கள் தூா்வாரும் பணிக்கு முதல்கட்டமாக பொதுப்பணித்துறை ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி தூதுபோனமூலை கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.எஸ்.எம்.மீனாட்சி சுந்தரம் பணிகளைத் தொடங்கிவைத்தாா். நிகழ்வில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் அருளரசன் உள்ளிட்ட பொதுப்பணித்துறை பொறியாளா்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.