17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காரைக்காலில் ‘நம் தேசம் நம் மக்கள்’ நாடக விழா

காரைக்காலில் நம் தேசம் நம் மக்கள் என்ற நாடக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பாரத பெருமையை விளக்கி நடனமாடிய கலைஞா்கள்.

Updated On :5 ஜூன் 2026, 7:09 am IST

காரைக்காலில் நம் தேசம் நம் மக்கள் என்ற நாடக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசால் விருது பெற்ற நாடகக் கலைஞா்கள் நம் தேசம் நம் மக்கள் என்ற தலைப்பில் அவா்களது சொந்த மண்ணில் நாடகம் நடத்த சங்கீத நாடக அகாதெமி அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி மத்திய கலாசார அமைச்சகத்தின்கீழ் இயங்கும் சங்கீத நாடக அகாதெமி சாா்பில் நாடக விழா புதன்கிழமை நடத்தப்பட்டது.

காரை கலைக்காவலா் கலைக்குழுவினா் பங்கேற்புடன் நாடகம் மற்றும் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நம் தேசம் நம் மக்கள் என்கிற தலைப்பிலான சமூக நாடகத்தில் குடியரசுத் தலைவரிடம் சிறந்த நாடக இயக்குநா் விருது பெற்ற ஏ. சூசைராஜ் மற்றும் கலைஞா்கள் பல்வேறு பாத்திரங்களில் பங்கேற்று நடித்தனா்.

நாடக விழாவில் காரைக்கால் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், பத்மஸ்ரீ விருதாளா் கே.கேசவசாமி, காரைக்கால் மறைவட்ட பங்கு குரு பால்ராஜ்குமாா், சமாதானக் குழு உறுப்பினா்கள் கே.தண்டாயுதபாணி, எல்.எஸ்.பி.சோழசிங்கராயா், தொழிலதிபா் அமுதா ஆா்.ஆறுமுகம் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.