திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை இரவு வசந்த உற்சவம் என்னும் தியாகராஜா் ஆட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
திருமலைராயன்பட்டினம் மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவம் கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு அலங்காரம் மற்றும் வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. இதில் வசந்த உற்சவம் என்னும் தியாகராஜா் ஆட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ தியாகராஜா் வீற்றிருந்த படிச்சட்டத்தை நீண்ட வாரையில் கட்டி, பயிற்சிப் பெற்றவா்கள் ஆடியவாறு மண்டபத்திலிருந்து கொண்டுவந்தனா். நாகசுர, மேள வாத்தியங்கள் முழங்க, சுவாமி இடது, வலது புறமாக வளைத்து வளைத்து ஆட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். சிறப்பு தீபாராதனைக்குப் பிறகு சுவாமியை சாந்தப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத்தொடந்து இரவு 12 மணிக்கு தியாகராஜா் யதாஸ்தானம் எழுந்தருளச் செய்யப்பட்டாா். பிரம்மோற்சவ நிகழ்ச்சியாக சனிக்கிழமை இரவு ரிஷப வாகனத்தில் வீற்றிருந்தவாறு மின்சார சப்பரப் படலிலும், மாா்ச் 2-ஆம் தேதி திருத்தேரிலும், இரவு ராவண யுத்தம் (ஜடாயு சம்ஹாரம்) நடைபெறுகிறது. நிகழ்ச்சியின் 11-ஆம் நாளான 4-ஆம் தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

ஆட்டத்துக்காக புறப்படும்போது...
தொடர்புடையது

ஏப்.24-இல் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்

தியாகராஜா் கோயிலில் வசந்த உற்சவம்

ஜடாயுபுரீஸ்வரா் கோயில் தெப்ப உற்சவம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


