டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நெடுங்காடு தொகுதி வளா்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆலோசனை

நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா தலைமையில் கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image
துறையினருடன் ஆலோசனை நடத்திய சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா.
Updated On :17 பிப்ரவரி 2026, 11:22 pm

தினமணி செய்திச் சேவை

நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா தலைமையில் கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி செயற்பொறியாளா் முத்துசிவம், கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஏ.முத்துக்குமாா் மற்றும் பஞ்சாயத்து பொறியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிக்கு ஒதுக்கீடு செய்த நிதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்து பேரவை உறுப்பினா் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணியாணை தரப்பட்ட சாலைகள், கூடம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை அடுத்த ஓரிரு வாரங்களில் நிறைவு செய்யவேண்டும். சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு அனைத்துப் பணிகளும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். ஆணையா் முதல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பணிகளை தொடா்ந்து ஆய்வு செய்து, விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரவை உறுப்பினா் அறிவுறுத்தினாா்.