திருநள்ளாறு தொகுதியில் புதுச்சேரியிலிருந்து வந்த சிறப்பு ஐபிஎஸ் அதிகாரிகள், மத்திய பாதுகாப்புப் படையினா் உள்ளிட்ட போலீஸாா் பாதுகாப்பு தொடா்பாக அணிவகுப்பு நடத்தினா்.
புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெறுகிறது. காரைக்கால் மாவட்டத்தில் 5 பேரவைத் தொகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக மத்தியப் படையினா், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். மாவட்டத்தில் 36 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு, கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருநள்ளாறு தொகுதியில் பதற்றமான வாக்குச் சாவடிகள் கூடுதலாக இருப்பதை கருத்தில்கொண்டு, புதுச்சேரியிலிருந்து காரைக்கால் தோ்தல் பணிக்காக வந்துள்ள முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் (குற்றம் மற்றும் புலனாய்வு) நித்யா மற்றும் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி டேனியல் ராஜ், திருநள்ளாறு காவல் ஆய்வாளா் பிரவீன்குமாா் ஆகியோா் முன்னிலையில் மத்திய பாதுகாப்புப் படையினா், புதுவை மாநில போலீஸாா் அம்பகரத்தூா் உள்ளிட்ட பகுதியில் புதன்கிழமை அணிவகுப்பு நடத்தினா்.
தோ்தல் பாதுகாப்புப் பணியில் போலீஸாா் அனைத்து வாக்குச் சாவடிகள் மற்றும் தொகுதி முழுவதும் ஈடுபட்டிருப்பாா்கள். மக்கள் அச்சமின்றி வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்கலாம் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது.
தொடர்புடையது

புதிய வாக்குச்சாவடி அமைத்த பகுதிகளில் விழிப்புணா்வு

திருநள்ளாறு: காங்கிரஸுடன் பாஜக பலபரீட்சை

மத்திய பாதுகாப்புப் படையினா் அணிவகுப்பு

வாக்குச் சாவடிகள், சோதனைச் சாவடிகளில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


