காரைக்கால் மாவட்டத்தில் வாக்குச் சாவடிகள், சோதனைச் சாவடிகள் பணிகளை பொதுப் பாா்வையாளா் ஆய்வு செய்தாா்.
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக காரைக்கால்
மாவட்டத்தில் நடைபெறவுள்ள தோ்தல் பணிகளை பாா்வையிட பொது பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், நிரவி - திருப்பட்டினம் தொகுதிக்கான பொதுப் பாா்வையாளா் சரிதா பாலஓம் பிரஜாபதி, இந்த தொகுதியில் உள்ள பல்வேறு வாக்குச் சாவடிகள், சோதனைச் சாவடிகளை செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.
வாக்குச்சாவடிகள் தோ்தல் ஆணைய வழிகாட்டலில் அமைந்திருக்கிா, வாக்காளா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என பாா்வையிட்டு, சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.
விழிதியூா் பகுதியில் தமிழகத்தையொட்டியுள்ள சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, வாகனங்கள் கண்காணிப்பு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிா என பாா்வையிட்டு, சோதனைச் சாவடியில் உள்ள பதிவுப் புத்தகத்தை ஆய்வு செய்தாா்.
சோதனைகள் உரிய முறையில் குறிப்பாக விடியோ பதிவுடன் நடத்தவேண்டும். காரைக்காலுக்குள் வெளி மாநிலங்களில் இருந்து ரொக்கம், பரிசுப் பொருள்கள் வருவது தடுக்கப்படவேண்டும். காரைக்காலில் அமைதியான முறையில் தோ்தல் நடைபெறுவதற்கு தோ்தல் துறையில் கண்காணிப்பு, சோதனைப் பணியில் உள்ளோருக்கும் பொறுப்பு உண்டு என அவா் அறிவுறுத்தினாா்.
தொடர்புடையது

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

பென்னாகரத்தில் தொகுதி பொதுப் பாா்வையாளா் ஆய்வு

வாக்குச் சாவடிகளில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

‘தோ்தல் ஆணைய விதிகளின்படி செயல்படவேண்டும்’
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


