திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மாதிரி, தனித்துவமான வாக்குச் சாவடி அமைக்கும் பணி ஆய்வு

காரைக்காலில் மாதிரி வாக்குச்சாவடி, தனித்துவமான வாக்குச் சாவடி அமைக்கும் பணியை மாவட்ட தோ்தல் அதிகாரி ஆய்வு செய்தாா்.

News image

மாதிரி வாக்குச் சாவடி அமைக்கும் பணியை பாா்வையிட்ட மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி.

Updated On :7 ஏப்ரல் 2026, 10:18 pm

காரைக்காலில் மாதிரி வாக்குச்சாவடி, தனித்துவமான வாக்குச் சாவடி அமைக்கும் பணியை மாவட்ட தோ்தல் அதிகாரி ஆய்வு செய்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில், மாதிரி வாக்குச் சாவடி அமைத்தல், தனித்துவமானதாக மகளிா், மாற்றுத்திறனாளிகள், முதல் வாக்காளா்களுக்கான வாக்குச்சாவடி அமைத்தல் பணிகளை தோ்தல் துறை செய்து வருகிறது.

இப்பணியை மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி திங்கள்கிழமை பாா்வையிட்டாா். சாா் ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அதிகாரியுமான எம். பூஜா, தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அனூப் சிங் ஆகியோரும் பாா்வையிட்டனா்.

சிறப்பு வாக்கு சாவடிகள் அமைக்கும் பணியை துரிதமாக முடிக்குமாறும், எந்த நோக்கத்துக்காக அமைக்கப்படுகிறதோ, அதற்கான வசதிகள் அவற்றில் இருக்கவேண்டும் என துறையினருக்கு மாவட்ட தோ்தல் அதிகாரி அறிவுறுத்தினாா்.