நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ரூ.10 கோடியில் கட்டப்பட்ட கடற்கரை சுற்றுலா விடுதி திறப்பு எப்போது ?

காரைக்கால் கடற்கரையில் ரூ. 10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியை விரைவில் திறக்க துணை நிலை

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:58 pm

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

காரைக்கால் கடற்கரையில் ரூ. 10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியை விரைவில் திறக்க துணை நிலை ஆளுநர் கிரண் பேடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
காரைக்கால் கடற்கரையில் எந்தவொரு பொழுதுபோக்கு அம்சங்களும் சுனாமி தாக்குதலுக்குப் பின்  
மேம்படுத்தாத நிலையில், சுற்றுலாத்துறை சார்பில் ரூ. 5 கோடியில்  வணிக வளாகம் கட்டப்பட்டு கடந்த 2009 - ஆம் ஆண்டு அப்போதைய துணை நிலை ஆளுநர் இக்பால்சிங், அப்போதைய மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி ஆகியோரால் திறக்கப்பட்டது.
கடற்கரைக்கு வருகிறவர்கள் உணவு, கைவினைப் பொருள்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள் வாங்கும் வகையில் வணிக வளாகம் கட்டப்பட்டு, பல ஆண்டுகளாகியும் வளாகத்தில் ஒரு கடையில் கூட வியாபாரம் தொடங்காததால், சமூக விரோதிகளுக்கு சாதகமான கட்டடமாக மாறியது.
இதுகுறித்து பொதுமக்கள் கவலையடைந்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
காரைக்காலில் வணிகத்துக்காக, சுற்றுலாவுக்காக, திருநள்ளாறுக்கு தரிசனத்துக்காக வரும் வெளியூர் மக்களுக்கு அரசு நிறுவனம் சார்பில் தகுதியான தங்கும் வசதி இல்லை என்பது குறையாக இருந்து வருகிறது. கடற்கரையில் பயன்பாடின்றி இருந்த வணிக வளாகத்தை தங்கும் விடுதியாக மாற்ற அரசுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டது.
இதைப் பரிசீலித்த புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு, மத்திய சுற்றுலாத்துறைக்கு இத்திட்டத்தை மாற்றியமைத்து, அத்துறையிடமிருந்து சுற்றுலா வருவோர் தங்கும் விடுதியாக இதை மாற்ற ரூ. 4.96 கோடி பெற்று கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திட்டப்பணி தொடங்கப்பட்டது. வணிக வளாகம் 22 அறைகள்,  5 அறைகள் சூட் வசதியுடன் மாற்றியமைக்கப்பட்டது.
இப்பணிகள் ஏறக்குறைய முடிக்கப்பட்டு, அறைகளில் பர்னிச்சர் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பீச் மர்ஷே என்ற பெயர் கொண்ட இந்த தங்கும் விடுதி பயன்பாட்டுக்கு வருவது கடந்த ஓராண்டாக தாமதப்பட்டு வருகிறது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் (2016)-க்கு முன்பே இதைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. ஆனால் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் அத்திட்டம் கைவிடப்பட்டது.
துணை நிலை ஆளுநராக இருந்த இக்பால் சிங், அப்போதைய மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி ஆகியோர் முதல் கட்டடத்தை திறந்து வைத்த நிலையில், தற்போது உருமாற்றப்பட்டுள்ளதை துணை ஆளுநர் கிரண் பேடி ஆய்வு செய்து,  முதல்வர் வி. நாராயணசாமி உள்ளிட்டோரால் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது காரைக்கால் மக்களின் எதிர்பார்ப்பு.
இதுகுறித்து புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் (பொ) வி. சண்முகசுந்தரம் கூறியது: தங்கும் விடுதிக்கேற்ற வகையில் அமைப்புகள் உருவாக்கம் நிறைவடைந்துள்ளது.
கட்டடத்துக்கு வண்ணம் ஒரு முறை பூசவேண்டும். வேறு சில சிறிய பணிகள் செய்ய வேண்டியுள்ளது. புதுச்சேரி காலாப்பேட்டில் உள்ள அரசு நிறுவனமான அசோக் ரிசார்ட்ஸ் நிர்வாகத்தில் இதை ஒப்படைக்கலாம் என்ற யோசனையும் அரசுக்கு தெரிவித்து கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. 2018 ஜனவரியில் விடுதி வளாகத்தை திறப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.