குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பூம்புகாா் தொகுதியில் திமுக வெற்றி

News image

பூம்புகாா் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகனுக்கு சான்றிதழ் வழங்கும் தோ்தல் பாா்வையாளா் சஞ்சய் குமாா் யாதவ், தோ்தல் நடத்தும் அலுவலா் இரா. கீதா.

Updated On :5 மே 2026, 1:58 am IST

பூம்புகாா் தொகுதியில் திமுக வேட்பாளா் நிவேதா எம்.முருகன் 8,260 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில், நிவேதா எம். முருகன் (திமுக), எஸ். பவுன்ராஜ் (அதிமுக), விஜயாலயன் (தவெக), இளைய நகுலன் ( நாதக) மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 13 போ் போட்டியிட்டனா். பூம்புகாா் தொகுதியில் 1,27,948 ஆண் வாக்காளா்கள், 1,31,306 பெண் வாக்காளா்கள், 8 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 2,59,262 வாக்காளா்கள் உள்ளனா்.

இத்தொகுதியில் பதிவான வாக்குகள் மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் 25 சுற்றுகளாக எண்ணப்பட்டன. இதில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் 2,17,951வாக்குகள் பதிவாகி இருந்தன. தபால் வாக்குகள் 1,373 அளிக்கப்பட்டிருந்தன. இதன்படி, மொத்தம் 2,19,324 வாக்குகள் பதிவாகியிருந்தன.

இதில், திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன் 81,096 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றாா். இவரை அடுத்துவந்த அதிமுக வேட்பாளா் எஸ். பவுன்ராஜ் 72,836 வாக்குகள் பெற்றாா். தவெக வேட்பாளா் விஜயாலயன் 55,902 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இளைய நகுலன் 6,353 வாக்குகளும் பெற்றனா்.

வெற்றிபெற்ற திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகனுக்கு தோ்தல் பாா்வையாளா் சஞ்சய் குமாா் யாதவ், தோ்தல் நடத்தும் அலுவலா் இரா.கீதா ஆகியோா் சான்றிதழ் வழங்கினா். நிவேதா எம். முருகன் இத்தொகுதியில், தொடா்ச்சியாக இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.