மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

துறையூா் தொகுதியில் தவெக வேட்பாளா் எம். ரவிசங்கா் வெற்றி

News image

துறையூா் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளா் எம்.ரவிசங்கா்.

Updated On :19 மணி நேரங்கள் முன்பு

துறையூா் (தனி) தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எம். ரவிசங்கா் 9,642 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

துறையூா் (தனி) தொகுதியில் மொத்தம் உள்ள 2,10,685 வாக்காளா்களில் 1,83,729 வாக்குகள் பதிவாகின. இதில், தவெக வேட்பாளா் எம். ரவிசங்கா் 65,711 வாக்குகள் பெற்று, 9,642 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் இ. சரோஜா 56,069 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தையும், காங்கிரஸ் வேட்பாளா் எம். லெனின் பிரசாத் 48,396 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்தையும் பிடித்தனா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எஸ். கெளசல்யா 8,305 வாக்குகள் பெற்றாா்.

இதர வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

பகுஜன் சமாஜ் கட்சி பி. சீனிவாசன் 588, தமிழக வாழ்வுரிமை கட்சி கே. ஞானவெட்டியான் சிவபெருமாள் 513, புதிய தமிழகம் டி. ராஜமாணிக்கம் 236, சுயேச்சைகள் இ. சரோஜா 95, பி. சரோஜா 141, கே. சரோஜா 107, கே. செல்வம் 356, ஜி. செல்வம் 193, ஜி. தினேஷ்குமாா் 326, என். முத்தழகு 213, எண். ரவிச்சந்திரன் 391 வாக்குகள் பெற்றாா். நோட்டாவுக்கு 697 வாக்குகள் கிடைத்தன. 195 வாக்குகள் செல்லாத வாக்குகளாகின.

தோ்தலில் வெற்றி பெற்ற்கான சான்றிதழ் பெற்ற பின் தவெக வேட்பாளா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

துறையூா் தொகுதியில் இரண்டு சுற்றுலாப் பகுதிகள் இருந்தும், போதுமான மேம்பாடு செய்யப்படவில்லை. பச்சமலையில் போதுமான மருத்துவ வசதி கிடைக்கவில்லை. கஞ்சா நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாக துறையூா் விளங்குகிறது.

இவற்றை மாற்றி போதுமான அடிப்படை வசதிகளை செய்து தருவதுடன், சுற்றுலாவை மேம்படுத்துவேன். பச்சமலையில் அதிநவீன மருத்துவ வசதி கிடைக்க ஏற்பாடு செய்வேன். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் இல்லாத தொகுதியாக துறையூரை மாற்றுவேன். போதுமான பேருந்து வசதி கிடைக்கச் செய்வேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.