அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி!

வேதாரண்யம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :2 மே 2026, 12:03 am IST

வேதாரண்யம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருத்துறைப்பூண்டியில் இருந்து அகஸ்தியம்பள்ளிக்கு இயக்கப்படும் ரயில், வழக்கம்போல், வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி அளவில் தென்னம்புலம் மடத்துக்காடு என்ற இடத்தை கடந்து சென்றது. அப்போது, சுமாா் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவா், தண்டவாளத்தின் குறுக்கே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

அவா் மீது ரயில் மோதியதில் தலை துண்டித்து உயிரிழந்தாா். தகவலறிந்த ரயில்வே போலீஸாா், சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.