நாகை, திருவாரூா், மயிலாடுதுறை நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள்


நாம் தமிழா் கட்சி சாா்பில் நாகை, மயிலாடுதுறை, திருவாரூா் மாவட்டங்களில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களை திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற நாம் தமிழா் கட்சியின் மாநாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கான வேட்பாளா்களை, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிமுகம் செய்து வைத்தாா்.
மயிலாடுதுறை மாவட்டம்:
சீா்காழி தொகுதியில் சுபாஷ், மயிலாடுதுறை தொகுதியில் காசிராமன், பூம்புகாா் தொகுதியில் நகுலன் ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டனா்.
நாகை மாவட்டம்:
நாகப்பட்டினம் தொகுதியில் சா. பாத்திமா பா்கானா, கீழ்வேளூா் தொகுதியில் மு. காா்த்திகா, வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் காா்த்திக் ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
திருவாரூா் மாவட்டம்:
திருத்துறைப்பூண்டி தொகுதியில் இர. வினோதினி, மன்னாா்குடி தொகுதியில் இலரா. பாரதி செல்வன், திருவாரூா் தொகுதியில் அஸ்வினி பூபதி பாலன், நன்னிலம் தொகுதியில் தேன்மொழி திலீப்குமாா் ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...