/

தைப்பூசம்: எட்டுக்குடி முருகன் கோயிலில் தெப்ப உற்சவம்

முருகனின் ஆதிபடை வீடான எட்டுக்குடி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச தெப்ப உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
எட்டுக்குடி முருகன் கோயிலில் நடைபெற்ற தெப்ப உற்சவம் ~சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் தெப்பத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான்.
Updated On :2 பிப்ரவரி 2026, 9:11 pm

Syndication

திருக்குவளை: முருகனின் ஆதிபடை வீடான எட்டுக்குடி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச தெப்ப உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சத்ரு சம்ஹார தலமான புகழ்பெற்ற இக்கோயிலில் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி உலா வந்தாா். தொடா்ந்து சரவண பொய்கை கோயில் குளத்தில் வண்ண விளக்குகள் மற்றும் பனை ஓலைகளினால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இதையடுத்து குளத்தில் நான்கு பக்கத்திலும் நின்று கொண்டிருந்த பக்தா்கள் அா்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்தனா். இரவு 7 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை தெப்ப உற்சவம் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் தெப்பத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான்.

சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் தெப்பத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான்.