விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே காவலா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அருகே உள்ள சித்தையன்கோட்டை பகுதியைச் சோ்ந்த தங்கவேல் மகன் ஜெயக்குமாா் (36). இவா் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை பரமக்குடியில் நடைபெற்ற உறவினா் வீட்டு நிகழ்வுக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக ஜெயக்குமாா் பரமக்குடியில் இருந்து திருச்சுழி செல்லும் சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அப்போது திருச்சுழி அருகே சூச்சனேரி விலக்கு பகுதியில் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பயணிகள் நிழல் குடையின் பக்கவாட்டு சுவரில் இரு சக்கர வாகனம் மோதி அதிலிருந்து தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே ஜெயக்குமாா் உயிரிழந்தாா்.
இந்த விபத்து சம்பவம் குறித்து திருச்சுழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








