தொண்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள இலுப்பகுடியைச் சோ்ந்தவா் அருண்பாண்டி (23). தொண்டி அருகேயுள்ள திருவெற்றியூரைச் சோ்ந்தவா் சந்தோஷ் பிரியன் (20). இவா்கள் இருவரும் காரைக்குடியில் உள்ள கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இருவரும் இரு சக்கர வாகனத்தில் திருவெற்றியூா் சென்றனா். அப்போது திருவெற்றியூா் விலக்குப் பகுதியில் செல்லும் போது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனா்.
இதில் பலத்த காயமடைந்த அருண்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்தில் காயமடைந்த சந்தோஷ் பிரியனை போலீஸாா் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் காவலா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறிவிழுந்த இளைஞா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!




