விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு சென்னகேசவ பெருமாள் கோயில் பங்குனி தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை அன்னவாகனத்தில் பெருமாள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மல்லாங்கிணறு செங்கமலநாச்சியார் சமேத சென்னகேசவ பெருமாள் கோயில் பங்குனி உத்திர தேரோட்ட திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொட்ங்கியது. இரவு முதல் மண்டகப்படியை முன்னிட்டு சென்னகேசவ பெருமாள் அன்னவாகனத்தில் மோகினி அவதாரத்தில் எழுந்தருளி நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் சிம்மவாகனம், கருடவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பல அவதாரங்களில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஏப்ரல் 3ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஸ்ரீதேவி, பூதேவியுடன் சென்னகேசவபெருமாள் ரதம் ஏறி நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். சனிக்கிழமை பூப்பல்லக்கில் உத்திர தேரோட்ட திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திலக் அதிரடி, அஸ்வினி அசத்தல்; மும்பை அபாரம்!
இன்டர் காசியை வீழ்த்தியது பஞ்சாப் எஃப்சி!

நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!

தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

