மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

டிராக்டருடன் கிணற்றுக்குள் விழுந்தவர் மீட்பு

திருச்சுழி அருகே டிராக்டருடன் கிணற்றுக்குள் விழுந்தவர் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டார்.விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள ரெங்கையன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜகண்ணு. இவரிடம் டிராக்டர்

Updated On :1 ஏப்ரல் 2015, 6:59 pm

திருச்சுழி அருகே டிராக்டருடன் கிணற்றுக்குள் விழுந்தவர் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள ரெங்கையன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜகண்ணு. இவரிடம் டிராக்டர் ஓட்டுநராக கத்தாளம்பட்டி ராஜேந்திரன் (வயது 45) பணியாற்றி வருகிறார். சேதுபுரம் கிராமத்தை சேர்ந்த தொந்தியனின் செவ்வாய்க்கிழமை நிலத்தை டிராக்டரில் உழும் பணியில் ராஜேந்திரன் ஈடுபட்டிருந்தார்.

அப்போது நிலை தடுமாறி டிராக்டர் அங்கிருந்த கிணற்றுக்குள் கவிழ்ந்தது.

இதையடுத்து ராஜேந்திரன் கிணற்றுக்குள் 3 மணி நேரம் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தார். அப்போது இவருக்கு உணவு கொடுக்க வந்த ரெங்கையன்பட்டியைச் சேர்ந்த பெருமாள்ராஜா பார்த்து மற்றவர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ராஜேந்திரன் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டார். டிராக்டரும் மீட்கப்பட்டது. படுகாயமடைந்த ராஜேந்திரனுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருச்சுழி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.