விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
இப் பேரணியை விருதுநகர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் வசந்தராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவியர்கள் திருச்சுழியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று பூமிநாதர் கோவில் வரை வாக்காளர் சேர்க்கை வாசகங்களை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலத்தில் வட்டாட்சியர் ரெங்கநாதன், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் ஷாஜஹான், மண்டல துணை வட்டாட்சியர் பாண்டிசங்கர் ராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஊர்வல முடிவுற்ற பின்னர் வாக்குசாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தத்தின்போது பொதுமக்களிடமிருந்து படிவங்கள் பெறுவதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

