லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க ஆண்டு விழா

காரியாபட்டி செயிண்ட் மேரீஸ் பள்ளி வளாகத்தில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க 4ஆவது ஆண்டு விழா, தலைவர் பொன்னுசாமி தலைமையில் நடைபெற்றது.

Updated On :18 அக்டோபர் 2014, 6:37 pm

காரியாபட்டி செயிண்ட் மேரீஸ் பள்ளி வளாகத்தில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க 4ஆவது ஆண்டு விழா, தலைவர் பொன்னுசாமி தலைமையில் நடைபெற்றது.

புலவர் சிதம்பரம் வரவேற்றார். செயலர் ரவீந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். மாநிலத் தலைவர் சாகுல்ஹமீது, துணைத் தலைவர் ராமராசு, உதவி கருவூல அலுவலர் தவமணி ஆரோக்கியராஜ், ஸ்டேட் வங்கி மேலாளர் ஸ்டான்லி ஜோன்ஸ், அரசு சித்த மருத்துவர் பரிமளச்செல்வன் ஆகியோர் பேசினர். பொருளாளர் சீனிவாசன், மாவட்ட அமைப்புச் செயலர் சீனிவாசகம், முன்னாள் தலைமை ஆசிரியர் பிலவேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நல்லாசிரியர் விருது பெற்ற அ. முக்குளம் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை ரேவதிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர் வேலுச்சாமி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.