லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

டிரான்ஸ்பார்மரை மாற்றக் கோரிக்கை

: காரியாபட்டி அருகே மாந்தோப்பு கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் தோட்ட விவசாயம் பெருமளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக குறைந்தழுத்த மின்சாரம் கிடைப்பதால் தோட்ட விவசாயத்துக்கு மின் மோ

Updated On :17 அக்டோபர் 2014, 7:05 pm

: காரியாபட்டி அருகே மாந்தோப்பு கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் தோட்ட விவசாயம் பெருமளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக குறைந்தழுத்த மின்சாரம் கிடைப்பதால் தோட்ட விவசாயத்துக்கு மின் மோட்டாரை பயன்படுத்த முடியவில்லை. குடிநீர் விநியோகமும் செய்ய முடியாத நிலை உள்ளது.

வீடுகளில் டி.வி., கிரைண்டர், மிக்ஸி மற்றும் பிரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை பயன்படுத்த முடியவில்லை. அத்துடன் மின்சாதனங்கள் அடிக்கடி பழுதாகின்றன. இரவில் மின் பல்புகள் தீபம் போல் எரிவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லையாம். அத்துடன் டிரான்ஸ்பார்மர் அடிக்கடி பழுதாகிறது. எனவே டிரான்ஸ்பார்மரை மாற்றி சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பூமிநாதன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.